இலங்கை

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்தார். 

அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். 

இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். 

பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 

அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…