கனடா

கனடாவில் அமெரிக்கா என்ற பெயரிலிருந்த வீதியின் பெயர் மாற்றம்!

 கனடாவில் அமெரிக்கா அவன்யூ என்ற பெயரிலிருந்த வீதியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட வரி நடவடிக்கைகள், கனடாவுக்கு எதிரான போக்கை எடுத்துள்ளதோடு, அது முழு நாட்டிலும் தேசியவாத கொள்கைகளை வலுப்பெறச் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வான் நகரம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்த நகரின் – “அமெரிக்கா அவன்யூ”என்ற வீதியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வான் நகர மேயர் ஸ்டீவன் டெல் டூகா, பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில், இந்த வீதியின் பெயரை “Terry Fox Avenue” என மாற்றும் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.

நம்மை பிரதிபலிக்கும் ஒரு கனடிய வீரரின் பெயரை இந்த வீதிக்கு வழங்க வேண்டும் என கருதினோம்,” என்று மேயர் டெல் டூகா கூறியுள்ளார்.

அமெரிக்கா அவன்யூ என்பது Jane Street மற்றும் John Deisman Boulevard இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய வீதியாகும்.

டெரி ஃபாக்ஸ், ஓர் அறியப்படும் கனடிய பிரபலமாவார், இவர் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

டெரி ஃபாக்ஸ், கனடாவின் பெருமைமிக்க தேசிய பிரபலங்களில் ஒருவர். அவரது தைரியம் மற்றும் தன்னலமற்ற உழைப்பு கோடிக்கணக்கான கனடாவாசிகளுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…