இலங்கை

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 குண்டுகள் மீட்பு

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது குறித்த முன்னாள் கொமாண்டோ படைவீரரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவற்றை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…