இலங்கை

சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (28) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் முன்னிலையாவதற்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…