உலகம்

கோப்பிக்கு திண்டாடும் அமெரிக்க மக்கள்!

அமெரிக்க கடைகளில் கோப்பி விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் கோப்பி இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கோப்பி இறக்குமதிக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா சுமார் நூறு பில்லியன் டொலர்களை செலவிடுகிறது. இதில் அதிக அளவான கோப்பி பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்க சந்தையில் காபியின் விலை சுமார் மூன்று டொலர்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பல நாடுகள் மீது விதித்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க சந்தையில் அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…