உலகம்

அமெரிக்காவுக்கு எதிராக திட்டம் தீட்டும் சீனா!

அமெரிக்காவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா ஐரோப்பாவில் கவனம் அதிகம் செலுத்தியுள்ளதுடன், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

சீன ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஐரோப்பிய தலைவர்கள் ஜூலை பிற்பகுதியில் பெய்ச்சிங் செல்லத் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது.

சீனா ஆசிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அடுத்த வாரம் மலேசியா செல்லும் சீன ஜனாதிபதி சி சின்பிங் பின்னர் கம்போடியாவுக்கும் வியட்நாமுக்கும் செல்லவுள்ளார்.

அதேவேளை ஒத்துழைப்புக்கான சீனாவின் அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…