உலகம்

ரஃபா கடவை மீண்டும் திறப்பு – ஐந்து நோயாளர்கள் மட்டுமே வெளியேற அனுமதி

சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ரஃபா கடவை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில், ஆபத்தான நிலையில் இருந்த ஐந்து
பலஸ்தீன நோயாளர்களே மட்டுமே காசாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில்,
செவ்வாய்க்கிழமை அதிகாலை கான் யூனிஸுக்கு தெற்கே பலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக் கொலை செய்தனர்.

இதனிடையே, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு எகிப்து வழியாக காசாவுக்குள் நுழைந்த முதல் பேருந்து, 12 பலஸ்தீனியர்களை ஏற்றிச் சென்றது.

20 மணி நேர பயணம் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் தடைகளுக்குப் பிறகு அந்த பேருந்து கடவையை கடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…