இலங்கை

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…