இலங்கை

பதுளையில் தீப்பரவல் – நான்கு பேர் வைத்தியசாலையில்

பதுளை நகரிலுள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் இன்று காலை (04 ) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உணவக கட்டடம் தீக்கிரையாகியுள்ளது.

பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியினால் தீப்பற்றல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உணவகத்திலிருந்த உணவு பண்டங்கள், உணவகத்தின் அத்தியாவசிய பொருட்கள் தீக்கிரையாகியுள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் உணவகத்திலிருந்து வெளியேற முடியாமல் புகை மண்டலத்தால் மூச்சு திணறலுக்குள்ளாகி காயங்களுடன் நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…