இலங்கை

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நடைபவனி

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி, இன்று சனிக்கிழமை (07) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் பகீரதன் தலைமையில், பாடசாலையிலிருந்து வாகனப் பேரணியுடன் இந்த நடைபவனி ஆரம்பமானது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை ஆணையாளரும் பழைய மாணவருமான என். தனஞ்செயன் உட்படப் பலர் கலந்துகொண்டனர். 

பாடசாலையின் நிறுவுநர் நல்லையா மாஸ்டரின் உருவப்படத்தைச் சாரண மாணவர்கள் தாங்கிச் செல்ல, நடைபவனி சிறப்பாக இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். 

இதன்போது மூவினங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான மாணவர்களின் கலைப் படைப்புகள் மற்றும் பல்வேறு அலங்கார ஊர்திகள் பவனியில் இடம்பெற்றிருந்தன. 

பேரணியானது ரயில் நிலைய வீதி ஊடாக, அரசடிப் பல்கலைக்கழக சுற்றுவட்டத்தைக் கடந்து, திருமலை வீதி வழியாகத் தண்டவன்வெளி வரை சென்று, அங்கிருந்து மீண்டும் ரயில் நிலைய வீதி ஊடாகப் பாடசாலையை வந்தடைந்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…