இலங்கை

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர்

கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் 25 கிராம் 150 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

40 வயதுடைய சந்தேக நபர் புதிய களனி பாலம் பகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…