இலங்கை

இறக்குமதி வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறியப்படுத்தினார். 

இது 2026 வரவுசெலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரியாகும். 

இந்த வரி அறவீடானது சுங்கத் திணைக்களத்திலேயே மேற்கொள்ளப்படும். 

தற்போது சுங்கத்தில் விடுவிப்புச் செயற்பாடுகளில் உள்ள வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது. 

வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால், 2.5% வரி என்பது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரோஷ ரோட்ரிகோ குறிப்பிட்டார். 

“எளிமையாகச் சொன்னால், 100 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள ஒரு வாகனத்தின் விலை, இந்த வரி காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயினால் அதிகரிக்கும். 

எனவே, இந்த வரிச் சுமையால் வாகன விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். 

எவ்வாறாயினும், ‘டித்வா’ (Ditwa)புயல் பாதிப்புகளுக்குப் பின்னர், தற்போது மக்கள் மத்தியில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…