இலங்கை

களுத்துறையில் துப்பாக்கிதாரி பயணித்த மோட்டார் சைக்கிள் மீட்பு?

களுத்துறை – வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் நேற்று (15) இரவு, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பண்டாரகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மோட்டார் சைக்கிள் இன்று (15) காலை பண்டாரகம – ஹொரன வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகிலுள்ள வயல்வெளிக்கு அருகில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதன் மீது கறுப்பு நிறத்தை ஒத்த தலைக்கவசம் ஒன்றும், மோட்டார் சைக்கிளுக்கு அருகில் தரையில் கறுப்பு நிறத் துணியால் தைக்கப்பட்ட புதிய ஜாக்கெட் ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 

அதற்கு சில அடிகள் தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு அருகில், மஞ்சள் நிற அரிசிப் பையில் இடப்பட்டிருந்த சப்பாத்து ஜோடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

குற்றத் தடயவியல் அதிகாரிகள் மற்றும் கைவிரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை முன்னெடுத்தனர். 

மோட்டார் சைக்கிள் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…