இலங்கை

காலஞ்சென்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிக்கிரியைகள் இன்று

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிக்கிரியைகள் இன்று (16) பிற்பகல் 4.30 மணிக்கு பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளன. 

நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதியான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி காலமானார். 

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், காலமான போது 92 வயதாகும். 

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் அங்கு வருகை தந்து தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…