இலங்கை

வீதி ரயில் கடவை சீரமைப்பு: 4 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம்

களனிவெலி ரயில் மார்க்கத்தின் புவக்பிட்டிய மற்றும் அவிசாவளை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட கிரிவந்தல ரயில் நிலையத்திற்கு அருகில் ஹைலெவல் வீதி ரயில் கடவையில் திருத்தப் பணிகளை முன்னெடுப்பதற்காக, அது தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 

குறித்த வீதியில் திருத்தப் பணிகள் மார்ச் 05ஆம் திகதி முதல் மார்ச் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதன் காரணமாக பின்வருமாறு போக்குவரத்து நடவடிக்கைகள் பகுதியளவிலும் முழுமையாகவும் தடைப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 மார்ச் 05 வியாழக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். 

2026 மார்ச் 06 வெள்ளிக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். 

2026 மார்ச் 07 சனிக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்துடன், மு.ப 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு (30 நிமிடங்கள்) முழுமையாக மூடப்படும். 

2026 மார்ச் 08 ஞாயிற்றுக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்துடன், மு.ப 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு (30 நிமிடங்கள்) முழுமையாக மூடப்படும். 

இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும், சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…