இலங்கை

வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட டெய்சி

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது

பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதியான மனநிலையில் இருக்கின்றாரா என்பது தொடர்பில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மனநல மருத்துவ அறிக்கையை, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரதிவாதி விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான மனநிலையில் இல்லையெ மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டெய்சி ஃபொரஸ்ட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…