இலங்கை

ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட காயமடைந்த 10 பேர் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…