இலங்கை

அக்குரேகொட இரட்டைக் கொலை – மேலும் இருவர் கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (06) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பேருந்து மூலம் மொனராகலை பகுதிக்கு அழைத்துச் சென்றமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடைய இப்பாகமுவ மற்றும் மாகொல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரினால் வழங்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பேருந்து ஒன்றின் மூலமே சந்தேக நபர் ஒருவரால் துப்பாக்கிதாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…