No products in the cart.
இன்று ஈரானுக்கு ‘கறுப்பு தினமாக’ அமையுமா? அமெரிக்கா எச்சரிக்கை!
ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் இன்று (10) நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















