இலங்கை

தென் கடலில் மீட்கப்பட்ட போதைப்பொருள்!

இலங்கை கடற்படையினரால் அண்மையில் நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் இருந்து 654 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த போதைப்பொருள் தொகையுடன் அந்த மீன்பிடி படகு நேற்று (12) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, 600 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 48 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மொத்தம் 654 கிலோகிராம் போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. 

அவற்றில் 478 கிலோகிராம்​ைஐஸ் போதைப்பொருள் எனவும், ஏனைய 176 கிலோகிராம் ஹெரோயின் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…