இலங்கை

தென்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய படகு கரைக்கு!

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகு இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். 

கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…