இலங்கை

போதைப்பொளுடன் ஒருவர் கைது!


கொட்டதெனியாவ பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொட்டதெனியாவ, ஹப்புவலான பகுதியில் நேற்று (15) இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 225 கிராம் ஹெரோயின் மற்றும் 165 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைதானவர் ஹப்புவலான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஆவார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, அஹுங்கல்ல – கம்கரணவத்த பகுதியிலும் 261 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…