இலங்கை

தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 9 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடமிருந்து 01 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் வதுரவில பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…