இலங்கை

ஆரம்பித்து ஒரே வாரத்தில் அறுந்து விழுந்த கேபிள் கார் ; 4 பேர் பலி

இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் விசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் காயமடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…