கனடா

தெற்காசியக் குடியேறிகளைக் குறிவைத்து நிதி மோசடி!

 கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் தற்காலிகக் குடியுரிமை அந்தஸ்துடன் (Temporary Status) வசிக்கும் தெற்காசிய சமூகத்தினரைக் குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட தீவிர விசாரணையின் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2025 கோடை காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், குறித்த நபர் தற்காலிகக் குடியுரிமை கொண்டவர்களைக் கொண்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன விற்பனை நிலையங்களை ஏமாற்றத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

அதிக மதிப்புள்ள வாகனக் கடன்கள் (Auto Loans) மற்றும் ஏனைய கடன் வசதிகளை மற்றவர்களின் பெயரில் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் இன்றி மோசடி செய்ய முயன்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறான மோசடி மூலம் பெறப்படும் பணம் மற்றும் சொகுசு வாகனங்களை அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கோ அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்யவோ அவர் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 21 வயதான உதயவீர் தில்லான் (Udayveer Dhillon) என்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றச் செயலில் ஈடுபட முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…