கிரிக்கட்விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸ் அணி தசுன் சானகவிற்கு அழைப்பு!

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக இலங்கை அணியின் சகலத்துறை வீரரான தசுன் சானக அழைக்கப்பட்டுள்ளார்.

ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தசுன் சானகவை 75 லட்சம் இந்திய ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 2.5 கோடி ரூபாய்க்கு மேல்) வாங்கியது.

டைட்டன்ஸ் அணி சானகாவுக்குப் புதிய அனுபவம் இல்லை என்பதுடன், அவர் முன்பு 2023ஆம் ஆண்டு அப்போது தலைவராக இருந்த ஹார்திக் பாண்டியாவின் கீழ் அணிக்காக விளையாடினார்.

பின் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சானக, மூன்று போட்டிகளில் விளையாடி 26 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

தசுன் சானக இலங்கைக்காக 102 டி20 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் உட்பட 1456 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 122.46 ஆக பதிவாகியுள்ளது.

அவர் பந்துவீச்சிலும் திறமையைக் காட்டியுள்ளதுடன், இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…