இலங்கை

கொஹுவலையில் சீனப் பெண் குத்திக் கொலை

கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த பெண் கொஹுவலை, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளதோடு, அவரது முன்னாள் சீனக் காதலனாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…