இலங்கை

நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த காரைச் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியபோது, அதனை நிறுத்தாது முன்னோக்கிச் செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…