கனடா

கனடாவில் அடுத்தடுத்து 3 கார் கடத்தல்கள்: 17 வயது சிறுவர்கள் இருவர் அதிரடி கைது!

கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அன்று மாலை 4 மணியளவில் டெர்ரி சாலை மற்றும் ஃபார்ம்ஸ்டெட் டிரைவ் பகுதியில் முகமூடி அணிந்த இருவர், ஒரு ஓட்டுநரை வலுக்கட்டாயமாக வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு காரைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, சுமார் 5 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள பிரிட்டானியா சாலை மற்றும் சிடார் ஸ்பிரிங்ஸ் சாலை ஆகிய பகுதிகளிலும் மேலும் இரண்டு கார் கடத்தல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து சம்பவ பகுதிக்கு விரைந்த ஹால்டன் பிராந்திய காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது ஒரு சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

மற்றொரு சிறுவன் அன்றிரவு தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் காவல்துறையினர் வெற்றிகரமாக மீட்டனர்.

கைதான இரண்டு சிறுவர்கள் மீதும் கொள்ளை, வன்முறையுடன் கூடிய வாகனத் திருட்டு மற்றும் உள்நோக்கத்துடன் அடையாளத்தை மறைத்தல் உள்ளிட்ட மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் திங்களன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவருமே 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், கனடாவின் ‘இளம் குற்றவாளிகள் நீதிச் சட்டத்தின்’ (Youth Criminal Justice Act) கீழ் அவர்களது பெயரையோ அல்லது அடையாளத்தையோ வெளியிட முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…