உலகம்

பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலின் சட்டத்துக்கு முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு

கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து எட்டு முஸ்லிம் நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன.

பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வௌியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்தக்கூட்டறிக்கையில் இனப் பாகுபாட்டு முறையை நிலைநிறுத்தவும் மேலும் மேலும் பாகுபாட்டை நடைமுறைப்படுத்தவும் இந்த சட்ட ஏற்பாடு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு சட்டத்திற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட யூத இஸ்ரேலியர்களுக்கு இதே தண்டனையை விதிக்காத ஒருதலைப்பட்சமான சட்டமாக இது இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…