இலங்கை

யாழில் திடீர் சோதனை ; வெதுப்பக பொருட்கள் விற்பனையில் முறைகேடு

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நான்கு வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷின் பணிப்பின் பேரில், சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன் போது, உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கடைகளுக்கு கொண்டு சென்ற இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கும், வீடுகளுக்கு விநியோகிக்க முச்சக்கர வண்டிகளில் பொருட்களை எடுத்துச் சென்ற இரண்டு ஓட்டுநர்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு கையாளும் மற்றும் உற்பத்தி நிலையங்களில் தொடர்ந்தும் திடீர் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…