இலங்கை

ரூ. 1,300 மில்லியனைக் கடந்த இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம்!

இம்முறை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச் ஜயதிலக தெரிவித்தார். 

தற்போது 24 மணிநேரமும் பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கண்டி தலதா மாளிகையின் ‘சிறி தலதா வழிபாட்டு’ நிகழ்வுக்காக செல்லும் மக்களின் நலன் கருதி விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கண்டி-கொழும்பு வீதியில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். 

மேலும், கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும், இந்த வருமானம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…