உலகம்

ஈரான் மீதான முற்றுகைக்கு ஆதரவு தருகிறோம் ; நெதன்யாகு வெளியிட்ட தகவல்

இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (13) தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் கடற்படையை முற்றுகையிடப்போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நெதன்யாகு பேசியதாக காணொளி ஒன்றை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கின்றது.

“நாங்கள், நிச்சயமாக, ட்ரம்ப்பின் இந்த உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

போர் நிறுத்தத்தை அறிவித்தவுடன் ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்காவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அமெரிக்கா இந்த ஈரானின் கடற்படையை முற்றுகை செய்ய முடிவு செய்துள்ளது” எனத் குறிப்பிட்டுள்ளார்.  

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…