இலங்கை

தவறுகள் குறித்து வெளிப்படையாக பேசிய நாமல்

கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருக்கலாம் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அத்தோடு அந்த தவறுகள் என்ன என்பதை நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முதன் முதலில் எம்மால் நடக்கும் தவறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.தவறுகள் யாருக்கும் நடக்கலாம்.அதான் மனித இயழ்பு. ஆனால் அந்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதே நாம் செய்ய வேண்டும்.

நாம் எமது கலாசாரங்களை பாதுகாப்பது கல்வி கற்பது எல்லாம் இதற்காகத்தான். அத்தோடு எதிர்காலத்தில் ஒரு நாடாகவும் அதன் குடிமக்களாக நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…