இலங்கை

வாகனங்களுக்கான QR முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும்!

இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தையொட்டி கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறையின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையினூடாக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…