விளையாட்டு

17 வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் ஜோன் சீனா!

பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா 17வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ரெஸில்மேனியா 41 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜோன் சீனா 17 வது முறையாக WWE சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் 16 முறை WWE சம்பியன் பட்டம் வென்றிருந்த ரிக் ஃபிளேரின் சாதனையை ஜோன் சீனா முறியடித்துள்ளார்.

ரெஸில்மேனியா 41 தொடருடன் WWE போட்டிகளில் ஓய்வு பெறப்போவதாக ஜோன் சீனா அறிவித்த நிலையில், இன்று நடைப்பெற்ற அவரது போட்டி பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்தப் போட்டியில் இறுதியில் முன்னாள் சம்பியன் கோடி ரோட்ஸை வீழ்த்திய ஜோன் சீனா, 17வது முறையாக பட்டத்தை வென்றார்.

16 முறை WWE சம்பியன் பட்டத்தை ரிக் ஃபிளேர் வென்றிருந்தமையே இதுநாள் வரை WWEஇல் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை சீனா முடியறித்துள்ளார்.

ஜோன் சீனாவிற்கு முன்னாள் மல்யுத்த வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…