இலங்கை

ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை கோரிக்கை


சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் கட்டாய பௌதீக பரிசோதனை இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் பாராளுமன்றக் குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

உயர்மட்ட அதிகாரிகளை சாட்சியம் வழங்க அழைக்க வேண்டுமென குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் குழு, சம்பந்தப்பட்ட கொள்கலன் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சூழ்நிலைகளை ஆய்வு செய்து, தனது கண்டறிதல்கள், பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த எழுத்து முன்மொழிவில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக உள்ள அநுர குமார திசாநாயக்கவை சாட்சியம் அளிக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் துறைமுக அமைச்சராக இருந்த பிமல் ரத்நாயக்க மற்றும் அப்போது துணை துறைமுக அமைச்சராக இருந்த ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோரும் அழைக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அதேபோல், அந்நேரத்தில் நிதி அமைச்சின் செயலாளராக இருந்த அதிகாரியிடமிருந்தும் சாட்சியம் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இந்தக் கோரிக்கை, குழு உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக ஆகிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் மூலம், குழுத் தலைவர் மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.    

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…