இலங்கை

ஈரானில் செயல்படுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு

ஈரானில் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், வான் நடவடிக்கைகள் குறித்த தகவலைத் தொடர்ந்து தெஹ்ரானின் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்தள்ளது.

தெஹ்ரானின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மாலை வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக, வான்வழி நடவடிக்கைகள் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, ஈரான் உஷார் நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

மேற்கு தெஹ்ரானில் “வான் பாதுகாப்பு துப்பாக்கி சூடு சத்தம்” கேட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. அரசு செய்தி நிறுவனம் கூறியது.

அதேவேளையில், “விரோத இலக்குகளை” எதிர்கொள்வதற்காக தலைநகரின் பல பகுதிகளில் அந்த அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…