இலங்கை

மகன் தாக்குதலில் தந்தை பலி

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்தத் தாக்குதலில் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதாலேயே, மகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய மகனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாத்தளை பொலிஸார் இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…