இலங்கை

புதிய அறிவிப்பு: தானசாலைகளுக்கு பதிவு இன்று முதல் ஆரம்பம்


வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தானசாலைகளுக்கான பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், தானசாலைகளை நடத்த விரும்பும் தரப்பினர், சம்பந்தப்பட்ட பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார ஆய்வாளருக்குத் தகவல் தெரிவித்து, தானசாலையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினர், தானசாலை நடத்தப்படும் இடம் மற்றும் அதன் வகை குறித்து சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பொது சுகாதார ஆய்வாளருக்குத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பதிவுக்குப் பின்னர், அனைத்து தானசாலை அமைப்பாளர்களுக்கும், சுகாதாரப் பாதுகாப்புடன் கூடிய முறையில் தானசாலையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பொது சுகாதார ஆய்வாளர்களால் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பொது சுகாதார ஆய்வாளர்களிடம் பதிவு செய்யாமலும், பாதுகாப்பற்ற முறையிலும் தானசாலைகளை நடத்துவோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…