உலகம்

தொடரும் இணைய முடக்கம் ; வெளியான அதிர்ச்சித் தகவல்

ஈரானில் இணையச் சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடக்கப்பட்டு இன்றுடன் (26) 58 நாட்கள் நிறைவடைந்துள்ளதாக இணைய கண்காணிப்பு அமைப்பான NetBlocks தெரிவித்துள்ளது.

ஒன்பதாவது வாரமாகத் தொடரும் இந்த இணையத் தடங்கல், தற்போது 1,368 மணித்தியாலங்களைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கத்தில் ஈரானில் மீண்டும் வெடித்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து, இந்த இணையக் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இணையச் சேவைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள சிறு வணிகங்கள், வர்த்தகம் மற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…