இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.

மேலும், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 96.29 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை இயற்கை எரிவாயுவின் விலையும் 1.25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2.51 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…