ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர்.

Exit mobile version