நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதுடன், மற்றைய நபர் திருடப்பட்ட பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Home
- மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
-
By me24tamil - 0
- 0

Related Content
-
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
By me24tamil 5 hours ago -
சிறுபோக அறுவடைக்கு புதிய பலம்: நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் நிதி
By me24tamil 5 hours ago -
-
முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா எஃப்.சி.ஐ.டி.யில் வாக்குமூலம்
By me24tamil 5 hours ago -
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
By me24tamil 5 hours ago -
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை
By me24tamil 5 hours ago