கனடா

டொராண்டோவில் எரிபொருள் விலை அதிகரிப்பு

ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், டொராண்டோவில் பெட்ரோல் விலை இன்று காலை லீட்டருக்கு நான்கு காசுகள் உயர்ந்தது.

‘மலிவு எரிசக்திக்கான கனேடியர்கள்’ அமைப்பின் தலைவர் டான் மெக்டீக் கருத்துப்படி, வெள்ளிக்கிழமைக்குள் விலை மேலும் எட்டு காசுகள் உயர்ந்து, சராசரியாக லிட்டருக்கு 190 காசுகள் என்ற நிலையை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தை வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகையுமே இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்

இந்த பதற்றமான சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் விளைவாக, கனடா வங்கி தனது வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகத் தக்கவைத்துள்ளதுடன், கடுமையான பணவீக்கம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு எரிபொருள் மட்டுமின்றி அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து, ஒரு நெருக்கடியான ஆண்டாக அமையும் என்றும், நமது தலைமுறை கண்டிராத அளவிலான தட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மெக்டீக் கவலை தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…