இலங்கை

விஜய் அரசியல் நிலைப்பாடு மீது கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் மாற்றங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், தமிழக மக்களின் தேர்தல் முடிவு ஊழல் அரசியலுக்கு எதிரான ஒரு சுட்டிக்காட்டாகும் எனக் குறிப்பிட்டார்.

“தமிழக மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை நிராகரித்து, தங்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், அவரின் தேர்தல் வெற்றியை வரலாற்றுச் சாதனையாக வர்ணித்தார்.

மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை, இலங்கை அரசியலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலித் தேசியவாதத்தை முன்வைத்து மக்களை வழிதவறச் செய்பவர்களை எதிர்காலத்தில் மக்கள் நிராகரிப்பார்கள் என அவர் கூறினார்.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், இலங்கையிலும் இதுபோன்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

மேலும், முன்னதாக நெடுந்தீவு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், அரசியலில் கருத்துரிமை அவசியம் என வலியுறுத்தினார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…