கனடா

அமெரிக்கா பொருட்கள் வாங்காவிட்டால் கனடாவே இருக்காது

அமெரிக்கா கனடாவிடம் பொருட்கள் வாங்கவில்லையென்றால், கனடா என்று ஒரு நாடே இருக்காது என மீண்டும் எச்சரித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். 

கனடாவுக்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்து, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக மிரட்டி வந்தார் ட்ரம்ப்.

கனடா மக்களோ, அமெரிக்கப் பொருட்களையே புறக்கணித்துவிடுவோம் என பதிலடி கொடுத்துள்ளார்கள்.

இனி அமெரிக்காவுக்கு சுற்றுலாவும் வரமாட்டோம் என கனேடியர்கள் பலர் கூறிவருகிறார்கள்.

இருந்தும் தனது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறாத ட்ரம்ப், எங்களுக்கு கனடாவின் கார்கள் வேண்டாம். நாங்களே எங்களுக்கான கார்களை தயாரித்துக்கொள்கிறோம்.

ஆனால், அமெரிக்கா கனேடிய தயாரிப்புகளை வாங்கவில்லையென்றால், கனடா என்றொரு நாடே இருக்காது என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.

What's your reaction?

Related Posts

பொலிஸ் ரோந்து வாகனம் மீது மோதிய கார் — இரு அதிகாரிகள் காயம்!

கனடாவின் ரொறன்ரோ நகரில், வாகனத் திருட்டு தொடர்பான விசாரணையின் போது சந்தேகத்திற்குரிய கார் ஒன்று காவல் துறையின் ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு காவல் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வியாழக்கிழமை…