இலங்கை

நுரைச்சோலை மின்நிலையத்தினால் சூழல் பாதிப்பு-ஆராய விசேட குழு நியமனம்!

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கும், அது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைமைத்துவம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமை தாங்கியிருந்தார். 

நுரைச்சோலை மின்நிலையத்தின் செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதற்குப் பொறுப்பான தரப்பினர் மற்றும் நிறுவன ரீதியான குறைபாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில் சுற்றாடல், மின்சக்தி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுகள் உட்பட பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இலங்கையிலுள்ள ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி, அந்த நாடுகளின் மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி திட்டங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்குமாறு இக்குழுவின் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…