இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றையதினம் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 111 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 167 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 82 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 122 கிராம் 447 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 168 கிராம் 513 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 154 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 300 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…