உலகம்

UAE அணுமின் நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்


ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான தரப்பு குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எந்தவொரு நாட்டையும் பெயரிடவில்லை.

கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் மீது ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது. அதில் ஒரு ட்ரோன் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்கு வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…